மக்களவை தேர்தல்: பெங்களூருவில் அண்ணாமலை தீவிர பிரசாரம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் வருகின்ற 26 மற்றும் மே 7ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து களமிறங்கியுள்ளது. 

பா.ஜ.க - மஜதவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அந்த வகையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது அவர், 10 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களும் மிகுந்த மரியாதை கிடைத்துள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தில், தமிழர்களின் அடையாளமாக செங்கோலை பிரதமர் வைத்துள்ளார். 

பிரதமர் மோடி செல்லும் இடங்களில் தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச அளவில் தமிழ் மொழிக்கு மேலும் சிறப்புகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha election Annamalai campaign Bengaluru


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->