அந்த பொண்ணை கைது பண்ணுங்க., இந்திய அளவில் ட்ரெண்ட்., இரண்டாவது நாளாக கொந்தளிக்கும் மக்கள்.! - Seithipunal
Seithipunal


இளம்பெண் ஒருவர் சிக்னலின் போதே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அருகே வரும் கார் ஒன்று சிக்னலில் நிற்கிறது. உடனடியாக அந்த இளம்பெண் கார் ஓட்டுனரை தாக்குகிறார். கார் ஓட்டுனரை இந்த இளம்பெண் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் முதலில் வெளியாகியது. அந்த ஓட்டுநர் மீது தவறு இருந்ததாக அனைவரும் கருதினர்.

ஆனால், இதற்கான உண்மை நிலவரம் என்ன என்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. முதலில் வெளியான காணொளியில் கார் தன் மீது மோதி விட்டதாக கூறி ஓட்டுநரை அந்த இளம்பெண் தாக்குவதாக இருந்தது. 

இரண்டாவதாக வெளியாகிய சிசிடிவி காட்சியில், அந்த இளம்பெண் மீது கார் மோதல் இல்லை என்பதும், அதற்கு முன்பே ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் பிடித்து நிறுத்தி விட்டார் என்பது தெரியவந்துள்ளது. இதில் கொடுமை என்னவெனில், அந்த இளம்பெண் பல வாகனங்களில் அடிபடாமல் பிழைத்ததே பெரிய விஷயம் என்பதை, வெளியான அந்த சிசிடிவி காட்சி அம்பலப்படுத்தியது தான்.

இதுகுறித்து போலீசார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துஉள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், ஒரு தரப்பினர் அந்தப் பெண்ணை கைது செய்ய வேண்டும் என்றும், அப்பாவி கார் ஓட்டுநர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற பெண்களிடம் (பெண்ணியம்-பெமினிசம்) இருந்து எங்களை காப்பாற்றுங்க என்று ஆண்களும் பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

locknow girl arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->