சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்! சிசிடிவியில் வெளிவந்த உண்மை!
Life sentenced prisoner escapes from prison truth revealed on CCTV
கடந்த 2011ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சௌமியா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி என்பவர், கண்ணூர் மத்திய சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது சிறை அறையை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவர் இல்லாதது அறியப்பட்டது.மேலும்,
கோவிந்தசாமி தனது உயர் பாதுகாப்பு அறையின் இரும்புக் கம்பிகளை வெட்டி, துணிகளைச் சேர்த்து கயிறாக்கி சிறை சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளின்படி, அவருக்கு வெளியிலிருந்து உதவி கிடைத்திருக்கலாம் என்று ஐயம் கொண்டுள்ளது.மேலும், இதனை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அவர் பதுங்கியிருக்கும் இடம் தொடர்பான ரகசிய தகவலின் பேரில் தப்பியோடிய கோவிந்தசாமியை கண்ணூர் காவலர்கள் கைது செய்தனர்.
மேலும் இவர் சிறைக்கு செல காரணம், சௌமியா (23), பிப்ரவரி 1, 2011 அன்று எர்ணாகுளத்திலிருந்து ஷோர்னூர் நோக்கிச் செல்லும் ஒரு பயணிகள் ரெயிலில் தனியாகப் பயணம் செய்தபோது, தமிழகத்தின் விருதாச்சலத்தை சேர்ந்த கோவிந்தசாமியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதில் கோவிந்தசாமிக்கு இந்த கொடூரக் கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
English Summary
Life sentenced prisoner escapes from prison truth revealed on CCTV