சுகாதாரத்துறை அதிகாரிப்போல வீட்டிற்கு வந்து விபரீதம்.! மாஸ்க் கொடுப்பது போல், மாவு கொடுத்த சம்பவம்.!
Kutka merchant's grandson kitnapped
உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பகுதியில் குட்கா வியாபாரியான ராஜேஷ் குமார் குப்தா என்பவருடைய பேரன் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டு உள்ளார்.
தற்பொழுது பேரணை உயிரோடு திருப்பி அளிக்க வேண்டுமென்றால், அவன் தலைக்கு நான்கு கோடி விலை வைத்து பேரம் பேசியுள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரபல குட்கா வியாபாரியாக ராஜேஷ் குமார் குப்தா என்பவர் இருக்கிறார்.

அவருக்கு ஆறு வயது பேரன் மீது அளவு கடந்த பாசம் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய பேரன் வீட்டிற்கு அருகே தனியாக விளையாடிக் கொண்டிருந்தபொழுது ஒரு கார் வந்து நின்றது. காரில் இருந்து ஒருவர் வேகமாக இறங்கி சிறுவனுக்கு சானிடைசர் மற்றும் முக கவசம் கொடுப்பது போல அருகே அழைத்துள்ளார்.
அதனை நம்பிய சிறுவனும் காரின் அருகே சென்றுள்ளான். அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் சிறுவனை காருக்குள் இழுத்து கதவை மூடிக் கொண்டு வேகமாக சீறிக் கொண்டு அந்த கார் பறந்துவிட்டது.
சிறுவனை வீட்டில் காணாமல் அனைவரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடைய வீட்டிற்கு ஒரு பெண் போன் செய்து உங்கள் பேரனை உயிருடன் பார்க்க வேண்டுமென்றால் 4 கோடி ரூபாய் பணத்தை ரெடி பண்ணுங்கள் என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

இதுகுறித்து தாத்தாவும், அந்த சிறுவனின் தந்தை ஹரி குப்தாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் போல வந்து எங்கள் குழந்தையை கடத்தி சென்று விட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காவல்துறையினரும் இந்த புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகின்றனர். ஒரு தனிப்படை போலீசார் அமைத்து சிறுவனை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Kutka merchant's grandson kitnapped