வரலாற்றில் இன்று : வரலாற்றில் தடம் பதித்து சென்றவர்கள்... அக்டோபர் 23.! - Seithipunal
Seithipunal


கிட்டூர் ராணி சென்னம்மா:

இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த கிட்டூர் ராணி சென்னம்மா 1778ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கர்நாடகத்தில் பெல்காம் அருகே உள்ள ககதி கிராமத்தில் பிறந்தார்.

சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். துணிச்சல்காரப் பெண் என்று பெயர் பெற்றார். மிகவும் செழிப்பாக இருந்த கிட்டூர் ராஜ்ஜியத்தை கைப்பற்ற ஆங்கில அரசு முடிவு செய்தது.

நவீன போர்க் கருவிகள், அதிக வீரர்கள் என்று அதிக வலிமையுடன் இருந்த ஆங்கிலேயப் படையை எதிர்த்து போராடிய ராணியின் வீரர்களால் ஆங்கிலேய வீரர்களை தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், முயற்சியை விடாமல் தொடர்ந்து போராடிய சென்னம்மா சிறைபிடிக்கப்பட்டார்.

புனித நூல்களைப் படித்தும், பூஜைகளில் ஈடுபட்டும் சென்னம்மா தனது சிறை வாழ்வை கழித்தார். இவர் 1829ஆம் ஆண்டு சிறையிலேயே மறைந்தார்.

விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முன்னணி வீராங்கனையாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வீரச் சின்னமாகவும் இன்றளவும் சென்னம்மா கொண்டாடப்படுகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kittur chennamme birthday


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->