மிரட்டல் மன்னன்! பெண் மருத்துவரையே ஏமாற்றிய கில்லாடி வாலிபர்...! பெண் கர்ப்பமானதால் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


போனில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான வாலிபருடன் பழகிய பெண் மருத்துவர் கர்ப்பமடைந்தார். அதன் பிறகு தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாக வாலிபர் மீது அவர் காவலில் புகார் கொடுத்துள்ளார்.மும்பையை சேர்ந்த 28 வயது இளம்பெண் அந்தேரியிலுள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 2023-ம் ஆண்டு அவருக்கு ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் டோங்கிரியில் வசிக்கும் 27 வயது வாலிபரின் அறிமுகம் கிடைத்தது.இதில் இருவரும் தங்களது கைபேசி எண்களை பகிர்ந்து கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தனர். இதனால் வாலிபரின் பேச்சி மயங்கினார் பெண் மருத்துவர். மேலும் அடிக்கடி நேரில் சந்தித்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

அப்போது வாலிபர் பெண் மருத்துவருடன் தனிமையில் இருக்கும் படத்தை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார். நெடுஙகாலமாக அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததில், கடந்த ஆண்டு இறுதியில் பெண் மருத்துவர் கர்ப்பமானார். இதுபற்றி பெண் மருத்துவர் வாலிபரிடம் தெரிவித்தபோது அவர் கருவை கலைக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு பெண் மருத்துவர் மறுக்கவே, தன்னுடன் தனிமையில் இருக்கும் படத்தை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அவர் கடந்த பிப்ரவரி மாதம் கருக்கலைப்பு செய்து கொண்டார். அதன் பின்னர் வாலிபர் பெண் மருத்துவர் பேசுவதையும். பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

இதனால் சந்தேகமடைந்த பெண் மருத்துவர் விசாரித்ததில் வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பது தெரியவந்தது. இதனாலேயே அவர் தன்னுடன் பழகுவதை தவிர்த்து வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.இதைத் தொடர்ந்து அவர் காவலில் புகாரளித்தார். இந்தப்புகாரின் பேரில் வாலிபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

king intimidation young man who cheated female doctor Shocked when woman got pregnant


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->