சமூக வலைதள காதலனுக்காக பெற்றெடுத்த குழந்தையை காவு கொடுத்த கொடூர தாய்.. 6 மாதம் கழித்து கைதான பெண்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சாந்தனூர் பகுதியில், குப்பைகள் இருந்த இடத்தில் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. இந்த குழந்தை பிறந்த சில மணிநேரத்திலேயே அதனை வீசி சென்றது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக சாந்தனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், அங்குள்ள வேலுவிளை பகுதியை சார்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி ரேஷ்மா (வயது 21) என்பவருக்கு பிறந்த குழந்தை என்பது உறுதியானது. அவரை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தனது பிறந்த குழந்தையை கொலை செய்து, உடலை வீசியதை ஒப்புக்கொண்டார். 

இது தொடர்பான வாக்குமூலத்தில், " எனக்கும் - சமூக வலைத்தளத்தில் அறிமுகம் ஆகிய வாலிபருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. அவருடன் செல்ல நான் தீர்மானம் செய்த நிலையில், எனது குழந்தை அதற்கு இடையூறாக இருக்கும் என கருதி, குழந்தையை கொலை செய்து குப்பையில் வீசினேன் " என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, ரேஷ்மாவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், சம்பவம் நடந்த 6 மாத விசாரணைக்கு பின்னர் கிடைத்த துப்புகளின் அடிப்படையில் காவல் துறையினர் ரேஷ்மாவை கைது செய்துள்ளனர். கணவன் ஒருவன் இருக்க, எதோ ஒரு விஷயத்திற்காக அறிமுகமான கயவனுடன் வாழ நினைத்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Thiruvananthapuram Woman Killed his Baby due to Social Media Affair Boy Love


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal