கேரளா || போலிஸைப் பார்த்து பயந்த மூன்று வயது சிறுவன்.! விளையாட்டு காட்டி சமாதானப்படுத்திய போலீசார்.!   - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் காஞ்சிரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் அனில்குமார் மற்றும் நயனா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் தேவ்ஜித் என்ற மகன் உள்ளார். 

அனில்குமாரின் பக்கத்தில் வீட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக போலீசார் வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்து அழத்தொடங்கிய தேவ்ஜித், போலீசார் சென்ற பிறகும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளான். 

சிறுவன் அழுததை அப்பகுதிக்கு வந்து சென்ற போலீசார் மூலம் தெரிந்து கொண்ட எஸ்.ஐ. அருண், சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வரச்செய்துள்ளார். 

அதன் பின்னர், எஸ்.ஐ. அருண் சிறுவன் தேவ்ஜித்தை தூக்கி மடியில் அமர வைத்து, சுமார் 1 மணி நேரம் கதை சொல்லியும், விளையாட்டு காட்டியும் அவனை சமாதானப்படுத்தினார். 

மேலும், சிறுவனுக்குப் பிடித்த இனிப்பு வகைகளையும் வாங்கிக் கொடுத்து, போலீஸ் மீது இருந்த அச்சத்தைப் போக்கினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala children see the police after cry


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->