கேரளா சேட்டனின் சேட்டை.. கல் வீச்சுக்கு பயந்து ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டிய டிரைவர்: இணையத்தில் வைரல்..! - Seithipunal
Seithipunal


இன்று தொழிற்சங்கத்தினரின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மாநிலம் முழுவதும் பெரும்பாலான அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோ, டாக்சிகள் எதுவும் ஓடவில்லை. இதனால் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

இன்று காலையில் திருவனந்தபுரம், பக்தனம் திட்டா, கொல்லம், இடுக்கி உள்பட சில பகுதிகளில் ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. பின்னர் அந்த பஸ்களும் நிறுத்தப்பட்டன. அப்போது பத்தனம் திட்டாவிலிருந்து இன்று காலை கொல்லத்திற்கு கேரள அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.

வேலை நிறுத்தத்தின் போது வாகனங்கள் இயக்கப்பட்டால் அவற்றின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசுவது கேரளாவில் வழக்கமாக உள்ளது. இதனால் கல்வீச்சுக்கு பயந்து அந்த பஸ்சின் டிரைவர் ஷிபு தாமஸ் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார்.

ஆனாலும், சிறிது தூரத்திலேயே அரூர் என்ற இடத்தில் வைத்து அந்த பஸ்சை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த பஸ்சின் மீது யாரும் கற்களை வீசவில்லை. கல்வீச்சுக்கு பயந்து பஸ் டிரைவர் ஹெல்மெட் அணிந்து பஸ்சை ஓட்டும் போட்டோவும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala bus driver wears helmet to avoid stone pelting


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->