எல்லை விவகாரம் : மகாராஷ்டிராவிற்கு ஒரு துளி இடம் கூட விட முடியாது - பசவராஜ் பொம்மை தகவல்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிராவிற்கு இடையே பெலகாவி எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. தற்போது வரை பெலகாவியை அம்மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, மீண்டும் இரு மாநிலங்களுக்கு  இடையே இந்த எல்லை பிரச்சினை கிளம்பியுள்ளது. 

இந்நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரு அங்குல நிலம் கூட விட்டு கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:- 

"கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா எல்லை விவகாரத்தில் அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ், மக்களை தூண்டிவிடும் வகையில் பெலகாவி பகுதியை மராட்டியத்தில் சேர்ப்பதற்கான கருத்துகளை தெரிவித்துள்ளார். 

அவருடைய இந்த கனவு ஒருபோதும் நினைவாகாது. கர்நாடக மாநிலத்தின் நிலம், நீர் மற்றும் எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. எல்லை பகுதியில் ஒரு அங்குல நிலம் கூட மகாராஷ்டிராவிற்கு விட்டு கொடுக்க மாட்டோம். 

அதேபோல், மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர், அக்கலகோட்டை பகுதியில் அதிகமாக கன்னடர்கள் வசிப்பதால், அந்த பகுதிகளையும் கர்நாடக மாநிலத்தில் சேர்க்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.

மகாராஷ்டிரா மாநிலம் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இரு மாநிலத்தின் எல்லையில் பிரச்சினைக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மகாராஷ்டிரா மாநிலம் இதுவரை வெற்றி பெறவில்லை. இனி வெற்றி பெற போவதும் இல்லை. இதற்காக நாங்கள் எங்களின் சட்ட போராட்டத்தை தீவிரமாக நடத்த தயாராகியுள்ளோம்" என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karnataka maharastra border problam pasavaraj bommai speach


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->