டீசலுக்காக பேருந்தை திருடி சென்று, அம்போவென விட்ட கொள்ளைக்கூட்டம்.. கர்நாடகாவில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


டீசலை திருட பேருந்தை கடத்தி சென்று, டீசலை சேகரித்து பேருந்தை அக்கடாவென விட்டு சென்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநில போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவர் ஹனுமன்த்ராயா. இவர் கஅ 06 ஆர் 0858 பதிவெண் கொண்ட அரசு பேருந்தை, குப்பி பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 09:40 மணியளவில் நிறுத்திவிட்டு, ஓட்டுநருக்கான விடுதியில் உறங்க சென்றுள்ளார். 

பின்னர், மறுநாள் காலையில் பேருந்தை இயக்க குப்பி பேருந்து நிலையத்திற்கு சென்ற நிலையில், அங்கு பேருந்து காணவில்லை. இதுகுறித்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, அவர்களின் அறிவுரைபடி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாயமான பேருந்தை கண்டறியும் நடவடிக்கையில் இறங்கினர். பேருந்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி இருப்பதால், பேருந்தின் இருப்பிடத்தை சோதித்த போது, அது குப்பி பேருந்து நிலையத்தில் இருந்த்து 30 கி.மீ தொலைவில் இருப்பது உறுதியானது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அக்கடாவென நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தை மீட்டனர். மேலும், பேருந்தில் இருந்த டீசல் முழுவதும் திருடப்பட்டது உறுதியான நிலையில், டீசலுக்காக பேருந்து கடத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

கர்நாடகாவில் தற்போது டீசல் திருட்டு போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், பெங்களூர் மற்றும் மைசூர் போன்ற பெரு நகரத்தில் பதிவான திருட்டு வழக்கு, தற்போது கிராமங்கள் வரை பதிவாக தொடங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka KSRTC Govt Bus Stolen Robbers Take Diesel Fuel


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->