மவுசு காட்டும் ட்ரைவ் இன் தியேட்டர்கள்.! படம்பார்க்க கார்ல தான்பா போகனும்.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்நாடகாவில் இன்னும் ஊரடங்கு முடிவுக்கு வரவில்லை. தியேட்டர்களை திறக்கவோ அல்லது படப்பிடிப்பிற்கோ அம்மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த வார இறுதியில் பெங்களூரு நகரில் டிரைவ்-இன் தியேட்டரில் திடீரென திறக்கப்பட்டது. 

இதற்கு மக்களும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து சென்றனர். இதுபோன்ற டிரைவ்-இன் தியேட்டரில் அவரவர் காரில் அமர்ந்து படம் பார்ப்பதால், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. மேலும், உரிய பாதுகாப்பை அளிக்கிறது. உணவு தேவைப்படும் நபர்கள் கார் நம்பரை குறிப்பிட்டு ஆர்டர் செய்தால் உணவு காருக்கே வந்துவிடும். 

இதன் காரணமாக மக்கள் டிரைவ்-இன் தியேட்டரில் ஆர்வம் காட்ட துவங்கி இருக்கின்றனர். இதற்கிடையில், கர்நாடக மாநில தியேட்டர் உரிமையாளர் சங்கம் இதுபோன்ற டிரைவ்-இன் தியேட்டர்கள் திறக்கப்பட்டதை கண்டித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கின்றது. இந்த தியேட்டர்கள் எந்த வகையில் பாதுகாப்பானது, அதற்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி? அல்லது சட்டவிரோதமாக திறக்கப்பட்டுள்ளதா? என்று அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பி இருக்கின்றது. 

வார இறுதி நாட்களில் மட்டும் செயல்படும் இந்த டிரைவ்-இன் தியேட்டரில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து முழுமையாக திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka introducing drive in theatre 


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->