திருமணத்திற்கு புறப்பட்ட பெண்.. இடையில் காத்திருந்த பணி.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவை சார்ந்த பெண்மணியொருவர், பாம்பு பிடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. 

பாம்பினை கண்டால் படையே நடக்கும் என்று கூறுவார்கள். இதனால் பெரும்பாலானோர் பாம்பை கண்டாலே விஷம் உள்ள பாம்பாக இருந்தாலும், விஷம் இல்லாத பாம்பாக இருந்தாலும் பதறிக்கொண்டு ஓடி விடுவார்கள். சிலர் பாம்பு என்று பெயரை கூறினாலே பதறியடித்து விடுவார்கள். 

பாம்பு விஷயத்தில் ஆண், பெண் பேதமின்றி பயம் கொள்ளும் நிலையில், கர்நாடகாவை சார்ந்த பாம்பு பிடிக்கும் பெண்மணி சேலையுடன் பாம்பை பிடித்துள்ளார். மேலும், அவர் திருமண நிகழ்ச்சிக்காக கிளம்பிக்கொண்டு இருந்த நிலையில், பாம்பு ஒன்று வீட்டிற்குள் வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து நேரடியாக அந்த வீட்டிற்கு சென்ற பெண்மணி, பாம்பை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட்டுவிட்டு, திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka girl Catch Snake


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal