பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அது தேசத்துரோகம் தான் - காங்கிரஸ் முதலமைச்சர் காட்டம்!
Karnataka CM condemn Pakistan supporter
கர்நாடகாவின் குடுப்பு கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது ஏற்பட்ட பரபரப்பான சம்பவம், ஒருவரது உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது.
பாத்ரா கல்லூர்த்தி கோவில் அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் உள்ளூர் 10 அணிகள் பங்கேற்றிருந்தன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடினர். அப்போது அஷ்ரஃப் என்ற இளைஞர் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், அவரது பேச்சு மற்றவர்களில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அங்கு கூடியிருந்த சில இளைஞர்கள் அவரை தாக்கினர். படுகாயமடைந்த அஷ்ரஃப், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கேரளாவின் வயநாடு மாவட்டம் புல்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுபற்றி கேள்வி எழுப்பிய நிருபர்களுக்கு முதல்வர் சித்தராமையா பதிலளிக்கையில், "பாகிஸ்தான் ஆதரவு கோஷம் தவறானது; அது யாரால் செய்யப்பட்டாலும் தேசதுரோகமாகும். விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
English Summary
Karnataka CM condemn Pakistan supporter