கர்நாடகாவில் தோல்வியடைந்தது பாஜக தலைமையிலான அரசு?..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எடியூரப்பா அம்மாநில முதல்வராக இருந்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி எப்படி அமைந்தது., அமைக்கப்பட்டது என்ற விஷயமெல்லாம் இந்தியாவே உற்றுநோக்கிய சம்பவம் என்பது நாடே அறியும். 

அவ்வுளவு முனைப்புடன் ஆட்சியை அமைத்த பாஜக தற்போது வரை அம்மாநில மக்களிடையே வரவேற்பை பெறாத மற்றும் எதிர்க்கும் கட்சியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் எடியூரப்பா மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. 

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்., என்ற கோசத்திற்கு ஏற்பட கடந்த காலங்களில் அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்றும், கொரோனா காலத்தில் நிலைமை அதைவிட மோசம் என்றும் கூறுகின்றனர். மேலும், பெங்களூருவை மையமாக வைத்தே அரசின் பெரும் வருவாய் கிடைத்துவிடுவதால், பிற நகரங்களை பற்றியும், கிராமங்களை பற்றியும் அரசு கவலைப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். 

இதனை உறுதி செய்யும் வகையிலேயே தற்போது எடியூரப்பாவிற்கு எதிரான பணிகள் அக்கட்சியாளர்களுக்கு உள்ளேயே நடைபெற்று வரும் நிலையில், பல கண்டனத்திற்கு பின்னர் தொழிலாளர்களுக்கு நிதிஉதவி வழங்க அறிவிப்பு வெளியானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நெடிட்சன்கள் #BJPFailedKarnataka என்ற ஹாஷ்டேக்குகளை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இது ட்ரெண்டிங் ஹாஷ்டெக் ஆக இருந்து வருகிறது.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka BJP Govt Down Social Media Handlers Trend about it 10 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->