கள்ளக்காதல் பெயரை சொல்லி தெருவோடு ஏற்படுத்திய அவமானம்.. பெண் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டை கடனகேரி கிராமத்தை சார்ந்தவர் யரண்ணா. இவர் அப்பகுதியில் தையல் கடையில் நடத்தி வந்த நிலையில், யரண்ணாவின் மனைவி லதா. தையல் கடைக்கு வரும் பெண்களுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக லதா அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக சங்கீதா என்ற 23 வயது பெண்மணி, யரண்ணாவின் தையல் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். 

சங்கீதா ஏற்கனவே திருமணம் முடிந்து கணவரை பிரிந்திருந்த நிலையில், யரண்ணாவிற்கும் - சங்கீதாவிற்கும் இடையே கள்ளக்காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக லதா சந்தேகித்துள்ளார். இதனால் தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சங்கீதாவை லதா அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் சங்கீதா மனமுடைந்து இருந்துள்ளார்.

இந்த நிலையில், சங்கீதா நேற்று கடையில் பணியாற்றி வந்த போதே கடையை அடைத்து இருக்கிறார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அரசல் புரசலாக லதாவிற்கு தகவலை தெரிவிக்கவே, கடைக்கு படையுடன் வந்து கதவை திறந்தவர்களுக்கு சங்கீதா மட்டும் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விபரத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த சங்கீதா, வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bagalkot girl suicide due to doubt illegal affair


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal