ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்.? கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10ம் தேதி தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமாக 73.19 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் வாக்கு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு என்னும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் தெரிந்து விடும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka assembly election vote counting today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->