கர்நாடக சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட பா.ஜனதா எம்.எல்.ஏக்கள்: காரணம் இதுதான்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை இடத்திற்கு காங்கிரஸ் தரப்பில் மூன்று பேரும், பா.ஜ.க, மதச்சார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இரண்டு பேரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் தரப்பில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களின் சயீத் நசீர் ஹுசைன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதால் பா. ஜனதாவினர் குற்றம் சாட்டினர். 

மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர். 

இந்நிலையில் கர்நாடகா சட்டமன்ற கூட்டம் இன்று காலை தொடங்கியதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பா.ஜ.க எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. 

இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா, உங்களிடம் நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அரசு நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளது. ரிப்போர்ட் வந்த பிறகு நாங்கள் யாரையும் விட மாட்டோம். 

தடய அறிவியல் ஆய்வாளர்களுக்கு ஆடியோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கடும் தக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Assembly BJP MLAs protest 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->