விகாஷ் துபே ஆதரவாளர்களால் பிரச்சனை.. கான்பூர் எஸ்.பி. தினேஷ் குமார்..!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தை கலக்கி வந்த பிரபல ரவுடியான விகாஷ் துபே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவனது கும்பலால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இவர் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் எஸ்.பியாக பணியாற்றி வரும் நிலையில், விகாஷ் துபே ரவுடியை என்கவுண்டர் வழக்கில் பிரதானமான அதிகாரியாக செயல்பட்டு இருந்தார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மனம் திறந்த தினேஷ்குமார் தெரிவிக்கையில், விகாஷ் துபேயின் தொடர்பில் இருந்த காவல் அதிகாரிகள் பலரையும் நீக்கிவிட்டு, நேர்மையான காவல் அதிகாரிகளை நியமித்து ஒரு குழு அமைக்கப்பட்டது. 

இதன் பின்னர் விகாஷ் துபே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தான். மேலும், ஏற்கனவே பணியில் இருந்த பழைய காவலர்கள் பணம் வாங்கி செயல்பட்டவர்கள் என்று கூறியுள்ள நிலையில், விகாஷின் கூட்டாளிகள் குறித்த முக்கிய புள்ளி விவரங்கள் சேகரித்து, அவர்களை கைது செய்ய வேண்டிய வேலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் பணியாற்றுவது மிகவும் சவாலாகவும் வித்தியாசமாகவும் இருந்ததாகவும், விகாஷ் துபேயின் கூட்டாளிகளிடம் இருந்து தங்களுக்கு அச்சுறுத்தல் வந்து கொண்டு தான் இருக்கிறது என்றும், அவர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து அமைச்சரை சுட்டுக் கொன்ற கும்பல் என்பது என்பதையும் அவர் கூறியுள்ளார். தங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்பதை அறிந்தே, நாங்கள் இந்தப் பணியில் துணிச்சலாக இறங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanpur SP Dinesh Kumar told about problem of Vikash Dupe supporters


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal