மூன்றாம் பாலினத்தவருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்..!! நீதிபதி ஜோயிகா வேண்டுகோள்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின நீதிபதி என்ற பெருமைக்குரியவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள லோக் அதாலத் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஜோயிதா. இவர் கடந்த 2017 முதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவரைப் போன்று இந்தியா முழுவதும் தற்பொழுது 3 மூன்றாம் பாலின நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜோயிகா மூன்றாம் பாலினத்தவருக்கு அரசின் அங்கீகாரம் தேவைப்படுகிறது என பேசி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "இந்தியாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 

குறிப்பாக காவல்துறைலும் ரயில்வே துறையிலும் மூன்றாம் பாலினத்தவருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன் வாயிலாக அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை மாற்றப்படும். அவர்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். மூன்றாம் பாலினத்தவருக்கு யாருமே வேலை கொடுக்காமல் இருந்தால் அவர்கள் எப்படி சாப்பிட முடியும்? எங்கு வசிப்பர்? இந்தியா முழுவதும் தற்பொழுது ஏராளமான மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கும் இடம் இன்றி உள்ளனர். அவர்கள் தங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Justice Zoika asked reservation for third gender too


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->