கொரோனா பதிப்பில் தமிழகத்தை ஓரம்கட்டிவிட்டு முன்னேறும் மாநிலம்.. பீதியில் மக்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளில் கொரோனா தொற்றால் 311 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,08,993லிருந்து 3,20,922 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் 1,54,330லிருந்து 1,62,379 ஆக உயர்ந்துள்ளது.உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884லிருந்து 9,195 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 1,49,348 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி மாநிலத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை1,327 ஆக அதிகரித்துள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,182 ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jun 15 corona update in delhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal