ஜம்மு-காஷ்மீர் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது – கெஜ்ரிவால் கடும் கண்டனம்
Jammu and Kashmir Aam Aadmi Party MLA Mehraj Malik arrested Kejriwal strongly condemns
ஜம்மு-காஷ்மீரின் ஒரே ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவாக உள்ள மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டம் (PSA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ், யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:“தொகுதி மக்களுக்காக மருத்துவமனை கேட்பது, சிறையில் அடைக்க வேண்டிய அளவுக்கு பெரிய குற்றமா? மெஹ்ராஜ் மாலிக் எங்கள் கட்சியின் சிங்கம். மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் போராடுவார். சிறை, அச்சுறுத்தல்கள், சதித்திட்டங்கள் எதுவும் ஆம் ஆத்மி சிப்பாய்களை ஒருபோதும் பயமுறுத்த முடியாது” என்றார்.
அதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிஷ் சிசோடியா தனது கருத்தில், “இது அரசாங்கத்தின் வெளிப்படையான சர்வாதிகாரம். மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் சர்வாதிகாரம் அதிகரிக்கும் போதெல்லாம் புரட்சி வலுவடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சி,” என தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற இந்த கைது அரசியல் ரீதியாக பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
Jammu and Kashmir Aam Aadmi Party MLA Mehraj Malik arrested Kejriwal strongly condemns