தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படும் போது இந்தியாவின் கல்விக் களத்தையே மாற்றும்: ஜக்தீப் தன்கர் கருத்து..!
Jagdeep Dhankar believes that the National Education Policy when implemented will transform the educational landscape of India
பா.ஜ., சித்தாந்தவாதியும், ஜனசங்க நிறுவனருமான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு இன்று 'பாலிதான் திவாஸ்' விழா நடைபெற்றது. குறித்த நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் அஞ்சலி செலுத்தி, அதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து அமிட்டி பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஏற்பாடு செய்த துணைவேந்தர்களின் 99-வது ஆண்டு கூட்டம் மற்றும் தேசிய மாநாட்டின் தொடக்க அமர்வில் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

30 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தக் கொள்கையை வடிவமைப்பதில் லட்சக்கணக்கான மக்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டன என்றும், நமது கல்வியின் களத்தையே உண்மையிலேயே மாற்றிய நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், அது எது என்பதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், 2020 தேசிய கல்விக் கொள்கை பற்றிக் குறிப்பிடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்கை நமது நாகரிக உணர்வு மற்றும் நெறிமுறைகளுடன் எதிரொலிக்கிறது, தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படும் போது இந்தியாவின் கல்விக் களத்தையே மாற்றும் என்றும் ஜக்தீப் தன்கர் மேலும் பேசியுள்ளார்.
English Summary
Jagdeep Dhankar believes that the National Education Policy when implemented will transform the educational landscape of India