முன்னாள் பாரதப் பிரதமர் திரு.பி.வி.நரசிம்ம ராவ் அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


முன்னாள் பாரதப் பிரதமர் திரு.பி.வி.நரசிம்ம ராவ் அவர்கள் பிறந்ததினம்!.

 இந்தியாவின் முன்னாள் பிரதமரான பி.வி.நரசிம்ம ராவ் 1921ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.

 இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தார். 

 பின்னர் மத்திய அரசின் கீழ் வெளியுறவு அமைச்சர் (1980-1984), உள்துறை அமைச்சர்(1984), பாதுகாப்பு அமைச்சர்(1984-85), மனித வள மேம்பாட்டு அமைச்சர் (1985) போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். 

1991ல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 1991-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தையான பி.வி.நரசிம்ம ராவ் 83வது வயதில் 2004 டிசம்பர் 23 ஆம் தேதி அன்று மறைந்தார்.


திரு.சாண்டோ சின்னப்பாதேவர் அவர்கள் பிறந்ததினம்!.

சிங்கங்களை செல்லபிள்ளைகளாக வளர்ந்த வீரத் தமிழன் திரை உலக சக்கரவர்த்தி திரு.சாண்டோ சின்னப்பாதேவர் அவர்கள் பிறந்ததினம்!.

 சாண்டோ மருதூர் மருதாச்சலமூர்த்தி அய்யாவூ சின்னப்ப தேவர் (ஜூன் 28, 1915 - செப்டம்பர் 8, 1978) கோவை இராமநாதபுரத்தில் பிறந்து தமிழ் திரையுலகில் கோலோச்சிய தயாரிப்பாளர். 

தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பாக பக்தி படங்கள் மற்றும் விலங்குளை வைத்து திரைப்படங்கள் எடுத்து வெற்றி கண்டவர். எம்.ஜீ.ஆரை வைத்து அதிக படங்களை தயாரித்தவரும் இவரே.  எம்.ஜி.ஆருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார், மேலும் எம்.ஜி.ஆர். அவரை "முதலாளி" என்று அழைப்பார். 

 முருக பெருமானின் மீது கொண்ட அளவு கடந்த பக்தியின் காரணமாக பல்வேறு ஆலய திருப்பணிகளை மேற்கொண்டவர். மருதமலை முருகன் கோயிலை ஏழாம் படைவீடாகவே மாற்றிய பெருமைக்குரியவர். 1970-1971 ஆம் ஆண்டில் கலைமாமணி விருது பெற்றார். 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the birthday of former Prime Minister Mr P V Narasimha Rao


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->