இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிகள்: மத்திய அரசு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இனி புதிய பைக்குகளுடன் 2 ஹெல்மெட்கள் வழங்குவது கட்டாயம் எனபுதிய பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இருசக்கர வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.இது, மோட்டார் வாகன விதிகள் 1989-ல் முன்மொழியப்பட்ட புதிய திருத்தமாகும்.

இந்த விதிகளின் படி இரண்டு ஹெல்மெட்கள் வழங்குதல் கட்டாயம்,வாகன உற்பத்தியாளர்கள் விற்கும் ஒவ்வொரு புதிய இருசக்கர வாகனத்துடனும் 2 ஹெல்மெட்கள் வழங்க வேண்டும்,ஹெல்மெட்கள் BIS தரநிலைக்கேற்ப இருக்க வேண்டும்,மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129-இன் கீழ் விலக்கு உள்ளவர்களுக்கு மட்டும் விதி பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.

 ABS (Anti-lock Braking System) கட்டாயம் – 2026 முதல்,ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும்,50ccக்கு மேல் எஞ்சின் திறன் அல்லது 50 km/hக்கு மேல் வேகம் கொண்ட L2 வகை வாகனங்களுக்கு மட்டும்.திடீர் பிரேக்கிங் போது சறுக்கல் தடுக்கும் பாதுகாப்பு அம்சம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த புதிய விதிகள் தொடர்பாக comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்த விதிகள், இருசக்கர வாகன பயணத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் அமையவுள்ளன என்பது கூடுதல் தகவல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிகள் மத்திய அரசு அறிவிப்பு


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->