சந்திரயான்-2 வை அடுத்து யாருமே நெருங்க முடியாத இடத்திற்கு விண்கலம் அனுப்பப்போகும் இந்தியா., இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு !! - Seithipunal
Seithipunal


கடந்த 15 ஆம் தேதி ஏவப்பட இருந்த சந்திரயான்-2 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாரை சரி செய்ய விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு இதையடுத்து, விண்கலத்தில் உள்ள கிரையோஜெனிக் எந்திரத்தின் ஹீலியம்  வால்வில் ஏற்பட்ட விரிசலால் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அதனை அடைக்கும் பணி 7 நாட்களாக நடைபெற்றது இதையடுத்து இன்று மதியம் 2.43 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தநிலையில், சந்திரயான்-2 விண்கலம் வெற்றகரமாக ஏவப்பட்டது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சோதனைகளை முறியடித்து சந்திரயான்-2 விண்ணில் பறந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 2 கால் பதிக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது எனவும் கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்தார் அப்போது அவர் கூரியதவது, சூரியனுக்கு விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருவதவாவும் , அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டம் இருப்பதாக தெரிவித்த அவர் மேலும் 45 நாட்களில் சந்திரயான்-2 நிலவை சென்றடையும், எந்த நாடும் செல்லாத இடத்தில் சந்திரயான்-2 ஆய்வு மேற்கொள்ள உள்ளது இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

isro scientist announced next plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->