இஸ்ரோ இம்மாத இறுதியில் 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவ திட்டம்.! விஞ்ஞானிகள் தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி. மாா்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்கள் இம்மாதம் 3-வது அல்லது 4-வது வாரத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. மேலும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும்.

இதில் முதல் நிலை திட எரிபொருள், 2-வது திரவ எரிபொருள் மற்றும் 3-வது நிலையில் கிரையோஜெனிக் எந்திரம் பொறுத்தப்பட்டு உள்ளது. 36 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக பல்வேறு கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன மற்றும் விநியோக அலகுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மேலும் கிரையோஜெனிக் என்ஜின் உள்ள 3-வது கட்டத்தில் 36 செயற்கைகோள்களுடன் வெப்பக் கவசம் பொறுத்தப்படும். இந்த 36 செயற்கைகோள்களும் சுமார் 6 டன் எடையை கொண்டவையாகும். 

இது இந்தியா பார்தி குளோபல் மற்றும் இங்கிலாந்து நாட்டு அரசின் கூட்டு முயற்சியாகும். இதையடுத்து 36 செயற்கைகோள்களின் மற்றொரு தொகுப்பு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் புவி சுற்றுப்பாதையில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தவகை செயற்கைகோள்கள் நிறுவனங்களின் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக குறைந்த புவி சுற்றுப்பாதையில் 650 செயற்கைகோள்களின் தொகுப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ISRO plans to launch 36 satellites by the end of this month


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->