டிசம்பரில் தனது கன்னி சோதனை பயணத்தை ஆரம்பிக்கும் ககன்யான்: இஸ்ரோ தலைவர் அறிவிப்பு..!
ISRO chief announces first Gaganyaan test mission to be launched in December
இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணி டிசம்பரில் தொடங்கவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், முன்னேற்றம் அபரிமிதமானதுஎன்றும், 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை செய்த பணிகளை விட 2015 முதல் 2025-இல் இஸ்ரோ கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பணிகளை முடித்து உள்ளது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார். அத்துடன், கடந்த ஆறு மாதங்களில், மூன்று முக்கியமான பயணங்கள் முடிக்கப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக ஆக்ஸியம் 04 பணி மிகவும் மதிப்புமிக்க பணியாகும், இது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட்டுள்ளது என்றும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு பூமி திரும்பிய முதல் இந்தியர் கேப்டன் சுபான்ஷு சுக்லா எங்களிடம் உள்ளார் என்றும், அடுத்த 02-03 மாதங்களில், மற்றொரு நாசா-இஸ்ரோ பணி தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அத்துடன், 10 ஆண்டுகளுக்கு முன்பு, தங்களிடம் ஒரே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் மட்டுமே இருந்ததாகவும், , இன்று, விண்வெளித் துறையில் 300-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன என்றும், தனியார் நிறுவனங்களால் இரண்டு துணை சுற்றுப்பாதை பணிகள் செய்யப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் 6,500 கிலோ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளன என்றும், இன்று வரை, 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்கள் இந்தியாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாகவும், இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும் என்றும்இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
English Summary
ISRO chief announces first Gaganyaan test mission to be launched in December