"புதிய தீவிரவாத அலை பரவி வருகிறது!": இந்தியாவிற்கு இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் எச்சரிக்கை!
Israeli Envoy Reuven Azar Warns India of New Wave of Global Terrorism Praises Indian Pilot Smith Machar
உலகளவில் புதிய தீவிரவாத அலை பரவி வருவதாகவும், இந்திய பிராந்தியத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஹமாஸ் அமைப்பு உத்வேகம் அளித்து வருவதாகவும் இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விமானக் கடத்தல் முயற்சி முறியடிப்பு: துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃபிளை துபாய் (Flydubai) விமானத்தைக் கடத்தி மோத முயன்ற சதியை, இந்திய விமானி ஸ்மித் மச்சார் (Smith Machar) மற்றும் பயணிகளின் துணிச்சலான நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். சாதுரியமாகச் செயல்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரைப் வெகுவாகப் பாராட்டினார்.
தீவிரவாத அலை குறித்து எச்சரிக்கை: உலகம் முழுவதும் தீவிர இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் புதிய அலை பரவி வருகிறது. பயங்கரவாதிகள் திட்டமிட்டுச் செயல்படும் வேகத்தை விட நாம் அதிவேகமாகச் செயல்பட்டு அவர்களின் தாக்குதல் திட்டங்களை விடாமுயற்சியுடன் முறியடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பின் தாக்கம்: தெற்காசிய மற்றும் இந்தியப் பிராந்தியத்தில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஹமாஸ் (Hamas) அமைப்பு உத்வேகம் அளித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
English Summary
Israeli Envoy Reuven Azar Warns India of New Wave of Global Terrorism Praises Indian Pilot Smith Machar