ஐபிஎல் ஏலம்.. ரூ. 20 கோடிக்கு இந்திய வீரரை தட்டி தூக்கப்போகும் அணி.!!
ipl auction k l rahul rs 20 crore
ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடைபெற்று முடிந்தது. இந்த சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைந்துள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்த சீசனில் பங்கேற்க உள்ளது. 2 அணிகள் புதிய சேர்க்கப்படுவதால் இந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் விதமாக 15வது சீசனுக்கு முன்பு மெகா ஏலம்நடைபெற உள்ளது.

இதனால், ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில். புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் அணிகள் 2 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது .இதனால் புதிய அணிகள் நட்சத்திர வீரர்களை தக்க வைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, லக்னோ அணி கே எல் ராகுலை 20 கோடிக்கும், ரஷித் கானை 16 கோடிக்கு வாங்கிய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே எல் ராகுல் ஐபிஎல் 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்களை குவித்து வருகிறார். மேலும் கேப்டன்சி திறமையும் உள்ளது. இதனால் தான் கே எல் ராகுலுக்கு லக்னோ அணி 20 கோடி வரை கொடுக்க முன்வந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
ipl auction k l rahul rs 20 crore