பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மாற்றம் - கொலிஜியம் பரிந்துரை.! - Seithipunal
Seithipunal


நேற்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் ஒன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி வேலுமணி உள்பட ஏழு நீதிபதிகளை மாற்றம் செய்வதற்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

அந்த பரிந்துரையின் படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கும், நீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஆந்திர உயநீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்தை சென்னை உயநீதிமன்றத்திற்கும், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி டி.நாகார்ஜுனை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி டி.ரமேசை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி லலிதா கன்னேகந்தியை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கும், மற்றொரு தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் ரெட்டியை பாட்னா உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு, அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள பரேஷ் உபாத்யாய் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார். 

ஒடிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கும் உச்சநீதிமன்ற கொலிஜீயத்தின் பரிந்துரை தொடர்பாக இன்னும் மத்திய அரசு முடிவு எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indias sevan highcourt justice transfer golijiyam order


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->