தந்தைக்கு மாரடைப்பு: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு!
Indian women cricket team smiriti mandhana marriage postpone
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனாவுக்கும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவருக்கும் திருமணம் இன்று (நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்தது.
திருமண நிகழ்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் அவர்களுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
சிகிச்சை: உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ஸ்ரீநிவாஸ் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தந்தையின் உடல்நிலை காரணமாகவும், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருப்பதாலும், இன்று நடைபெறவிருந்த இவர்களின் திருமணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Indian women cricket team smiriti mandhana marriage postpone