2022-23ல் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே..! - Seithipunal
Seithipunal


இந்திய ரயில்வே 2022-23 நிதியாண்டில் 2.40 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 25 சதவீத வளர்ச்சியாகும். அதாவது, 2021-22 நிதியாண்டை விட ரூ. 49,000 கோடி அதிகமாக உள்ளது. இதில் சரக்கு வருவாய் ரூ.1.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 15 சதவீத வளர்ச்சியாகும். இதையடுத்து இந்திய ரயில்வேயின் பயணிகள் வருவாய் 61 சதவீத வளர்ச்சியுடன் ரூ.63,300 கோடியை எட்டியுள்ளது.

மேலும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ரெயில்வே துறை, ஓய்வூதிய செலவினங்களை முழு அளவில் எதிர்கொள்ளும் திறனை பெற்றுள்ளது மற்றும் வருவாய் மற்றும் இறுக்கமான செலவின மேலாண்மை ஆகியவை 98.14 சதவீத இயக்க விகிதத்தை அடைய உதவியுள்ளது. இதையடுத்து அனைத்து வருவாய் செலவினங்களும் போக, இந்திய ரெயில்வே ரூ.3,200 கோடியை பெற்றுள்ளது என்று இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Railways Earns Record Revenue Of Rs 2 point 40 Lakh Crore In 2022 2023


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->