பாலியல் குற்றங்களுக்கு, இனி ஆண்மை பறிப்பு தண்டனை.! பரபரப்பாகும் நாடு.!  - Seithipunal
Seithipunal


இன்று நாடாளுமன்றத்தில் ஹைட்ரபாத்தில் டாக்டர் பிரியங்கா ரெட்டி, மற்றும் தமிழ்நாட்டில் ரோஜா உள்ளிட்ட பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எம்பிக்கள் மிகவும் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 

இதுகுறித்து திமுக எம்பி வில்சன், "பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையாக ஆண்மை பறிப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். கொரியா, அமெரிக்கா, கலிஃபோர்னியா, அலபாமா போன்ற நாடுகளில் கொடுக்கும் தண்டனையை போல பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்வது போன்ற குற்றம் புரிபவர்களுக்கு ஆண்மை பறிப்பு செய்ய வேண்டும். 

Related image

இந்த சிகிச்சைக்கு தேவையான செலவை குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்தார். மேலும், சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன் ‘பாலியல் குற்றம் புரிந்தவர்களை பொதுவெளியில் நிற்கவைத்து கொல்ல வேண்டும்’ என்று மிகவும் ஆவேசமாக தெரிவித்தார். 

அதிமுக எம்பியான விஜிலா சத்தியானந்த் இதுகுறித்து, ‘நாட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. பிரியங்கா ரெட்டி வழக்கில் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேரையும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தூக்கில் இட வேண்டும். மேலும், இதற்காக விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும். தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்." என்று கூறியுள்ளார். இந்த சூடான விவாதங்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

iNDIAN MPS HOT ARGUMENT IN PARLIAMENT


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->