100 கிலோ எடையில் பிரமாண்ட கேக் செய்து.. உலக சாதனை படைத்த இந்தியப் பெண்.! - Seithipunal
Seithipunal


புனைவை சேர்ந்த கேக் கலைஞர் ஒருவர் சிக்கலான வடிவமைப்பு கொண்ட 100 கிலோ கேக் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

புனைவை சேர்ந்த பிரபல கேக் கலைஞர் பிராச்சி தபால் டெப், 'வேகன் ராயல் ஐசிங்' என்ற முறையில் மிலான் கதீட்ரலின் சிக்கலான வடிவமைப்பை கொண்ட கேக் ஒன்றை 100 கிலோ எடையில் பிரம்மாண்டமாக செய்துள்ளார்.

இதற்காக உலக சாதனை புத்தகம் இவரை முன்மாதிரியான ராயல் ஐசிங் கலைஞர் என்று அங்கீகரித்துள்ளது. இந்தப் பெண் ராயல் ஐசிங் என்ற சிறப்பு வடிவங்களில் கேக் செய்யும் கடினமான கலையில் சிறப்பு மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மிலான் கதீட்ரலின் கேக் 6 அடி 4 அங்குல நீளம், 4 அடி 6 அங்குல உயரம் மற்றும் 3 அடி 10 அங்குல அகலம் கொண்டது. இவர் ஐரோப்பிய கட்டிடக் கலை மாதிரியான முட்டை இல்லாத ராயல் ஐசிங் முறை மூலம் கேக்குகளை தயார் செய்து பிரபலமானவர்.

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற கேக் கலைஞர் பிராச்சிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian girl made a huge cake created a world record


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->