"பேஸ்புக் ஓனரை விட அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்!" வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட புதிய தகவல்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்" அமெரிக்காவில் அதிக ஊதியம் பெரும் தலைமைச் செயல் அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக ஒரு இந்தியரும் இடம் பெற்றுள்ளது கவனத்தைக் கவர்ந்துள்ளது.

பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் தங்களது தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு ஊதியத்துடன் தங்கள் நிறுவனத்தின் பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்குகளையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்" வெளியிட்ட பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நிகேஷ் அரோரா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். 

பாலோ ஆல்டோ நெட்வொர்க்கிங் நிறுவனத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் நிகேஷ் அரோராவுக்கு ஒரு ஆண்டுக்கு 151.43 மில்லியன் டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் 500 தலைமைச் செயல் அதிகாரிகளில் மேலும் 17 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவற்றில் அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயணனும் 11ம் இடத்தில் இடம் பெற்றுள்ளார். டெஸ்லாவின் எலன் மஸ்க், கூகிளின் சுந்தர் பிச்சை, மெட்டாவின் மார்க் ஸக்கர்பர்க் ஆகியோரை விட அதிக ஊதியம் பெரும் நிகேஷ் அரோரா டெல்லி ஏர்போர்ஸ் பப்ளிக் ஸ்கூலின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian earns more than Facebook owner published by Wall Street Journal


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?




Seithipunal
--> -->