எல்லை பதற்றம்.. பிரான்சிற்கு அழுத்தம்.. விரைவில் களமிறங்கும் ரபேல்..!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016இல் பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 58 ஆயிரம் கோடிக்கு, 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த ஆண்டு அக்டோபர் எட்டாம் தேதியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்சின் விமானப்படை தளத்தில் இருந்து முதல் விமானத்தை பெற்றுக்கொண்டார். 

டசால்ட் நிறுவனம் மத்திய அரசுடன் கொண்ட ஒப்பந்தத்தின்படி 2020 மே மாதத்திற்குள் நான்கு ரஃபேல் போர் விமானங்களை நமக்கு டெலிவரி செய்ய வேண்டும். 

ஆனால், கொரோனவைரஸ் பிரச்சனையால் இந்த டெலிவரி தள்ளிப்போனது. இந்நிலையில், உடனடியாக போர் விமானத்தை டெலிவரி செய்யும்படி பிரான்ஸ் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை கோரிக்கை வைத்துள்ளது. அந்த நிறுவனமும் அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக டெலிவரி செய்ய நடவடிக்கையை முடுக்கி விட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, ஜூலை இறுதிக்குள் ஏவுகணைகளுடன் கூடிய ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து விடுமென்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 27-ஆம் தேதி ஹரியானாவில் இருக்கும் அம்பாலா விமானப்படைத் தளத்தில் ரஃபேல் போர் விமானங்கள் தரை இறங்கும் என்று தெரிகிறது. 

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன தொந்தரவு இருக்கும் நேரத்தில், போர் விமானங்கள் இந்தியாவுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. ரஃபேல் விமானங்களின் வருகை இந்திய விமானப்படைக்கு பலத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Army sent War plane china border


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal