பல்லஸ்டிக் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி....! - கர்னல் சோபியா குரேஷி - Seithipunal
Seithipunal


காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ''ஆப்ரேஷன் சிந்தூர்'' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3  தினங்களாக இந்திய எல்லைகளை கடுமையாக தாக்கி வருகிறது.

இதில், பாகிஸ்தான் நேற்றிரவு பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களை குறிவைத்து தாக்கியது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் ''ஏவுகணை மற்றும் டிரோன்'' மூலம் அதிக தாக்குதல் நடத்தியது.

இதை இந்திய ராணுவம், அறவே முறியடித்தது. இந்நிலையில், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தொடர் தாக்குதலுக்கு தரப்படும் பதிலடி குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் 'விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங்' ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

கர்னல் சோபியா குரேஷி:

இது குறித்து ''கர்னல் சோபியா குரேஷி'' தெரிவித்ததாவது,"பஞ்சாபில் உள்ள விமானப்படை தளத்தை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தானின் செயல் முறியடிக்கப்பட்டது.நேற்றிரவு முதல் அதிகாலை வரை 26 முறை இந்தியாவை தாக்குவதற்கு பாகிஸ்தான் முயற்சித்துள்ளது.

பஞ்சாபில் உள்ள விமானப்படை தளத்தை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கியதால் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.அதிகாலை 1.40 மணிக்கு இந்தியாவை தாக்குவதற்கு அதிவேக ஏவுகணையை பாகிஸ்தான் பயன்படுத்தியது.பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில் பல்லஸ்டிக் ஏவுகணையை இந்தியா பயன்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்தையும் பாகிஸ்தான் குறி வைத்துள்ளது.ஸ்ரீநகரில் உள்ள பள்ளி, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் பாகிஸ்தான் குறி வைத்துள்ளது" எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian Army retaliates to Pakistan with ballistic missile Colonel Sophia Qureshi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->