12 சீனர் வீரர்கள் சூரசம்ஹாரம்.. இராணுவ வீரருக்கு விருதுக்கு பரிந்துரை?..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சுமார் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன நாட்டின் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் இல்லாத நிலையில், இந்த தாக்குதலை திட்டமிட்டு சீனா நடத்தியது.

மேலும், இந்த தாக்குதலின்போது துப்பாக்கிகளையும் பயன்படுத்தப்படாத நிலையில், கைகலப்பில் கற்களை கொண்டு தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் துப்பாக்கியை பயன்படுத்த கூடாது என்ற விதிமுறையும் வரையறுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சீன ராணுவத்தினர் முன்கூட்டியே இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களை தங்களுடன் எடுத்து வந்த நிலையில், இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்திருந்தாலும், சீனாவின் தரப்பில் சொல்ல முடியாத அளவு பலத்த இழப்பு ஏற்பட்டது. 

இதற்கு பின்னர் இந்தியா பல நடவடிக்கைகளை சீனாவிற்கு எதிராக எடுத்து வரும் நிலையில், 12 சீனர்களை கைகளாலேயே கொன்ற சிபாய் குர்தேஜ் அவர்களுக்கு மகாவீர் சக்ரா விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மகாவீர்சக்ரா வழங்க வாய்ப்புள்ளது என்று தகவலானது வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Army greeting by award when killed 12 China Soldiers galwan clash


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->