காலிஸ்தான் விவகாரம் || தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!! கனடாவுக்கு இந்தியா பதிலடி! - Seithipunal
Seithipunal


காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்ஜிப் நிஜ்ஜர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்டார். நிஜ்ஜர் படுகொலையில் இந்தியாவைச் சேர்ந்த உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது. இந்த நிலையில் நேற்று கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து மூத்த அதிகாரியை வெளியேறுமாறு கனடா அரசு உத்தரவிட்டது. 

இந்த நிலையில் டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அழைத்த மத்திய அரசு கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு கனடா தூதரக அதிகாரி ஒருவரை இந்தியா விட்டு வெளியேறுமாறும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அடுத்த 5 நாட்களுக்குள் கனடா தூதராக அதிகாரி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவிலிருந்து கனடா தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றி பதிலடி கொடுத்துள்ளது. 

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுக்க கூடாது என இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டிற்கு வந்த கனடா பிரதமரிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் களமாக கனடா மாறிவிடக்கூடாது என தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India orders Canadian consular officer to leave the country


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->