விரைவில் இருளில் தத்தளிக்கப்போகும் இந்தியா?.. சீனாவை போல மோசமான நிலைக்கு வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


உள்நாட்டு உற்பத்திக்குறைவு காரணமாக இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடானது ஏற்பட்டு இருக்கிறது. இந்த தட்டுப்பாடு சரியாக 6 மாதங்கள் வரை ஆகலாம் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் மின்சார தேவைகளுக்கு நிலக்கரியை பெருமளவு சார்ந்து இருக்கும் சூழல் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. மேலும், நிலக்கரியை மின்சாரத்திற்காக அதிகளவு சார்ந்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. கடந்த 2020 ஆம் வருடத்தில் 1125.20 டெரோவாட் நேர மின்சாரம் நிலக்கரி மூலமாகவே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அளவு மொத்த மின்சார உற்பத்தியில் 80 % க்கும் மேல் ஆகும். 

தற்போதைய நிலையில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியை விட மின்தேவையானது அதிகளவு உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. அக். 4 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் நிலக்கரியை வைத்து மின்சாரம் தயார் செய்யும் 135 ஆலைகளில், கிட்டத்தட்ட 55 % ஆலைகளில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரிகள் கையிருப்பில் உள்ளன என்றும் கூறப்படுகிறது. 

இந்திய நிலக்கரி தேவைகள் என்பது உள்நாட்டு உற்பத்தி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிலையமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) நிறுவனம், இந்தியாவின் நிலக்கரி தேவையில் 84 % உற்பத்தி செய்து கொடுக்கிறது. பிற தேவைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச அளவிலான நாடுகளில் சீனா நிலக்கரி உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது. 

சீனாவில் 2020 ஆம் வருடத்தில் 80.91 எக்சாஜில் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தோனேஷியாவில் 13.88 எக்சாஜில் நிலக்கரியும், இந்தியாவில் 12.68 எக்சாஜில் நிலக்கரியும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பயன்பாடுகளை பொறுத்த வரையில் சீனா 82.27 எக்சாஜில் என்ற அளவிலும், இந்தியா 17.54 எக்சாஜில் என்ற அளவிலும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 

தற்போது, கோல் இந்தியா நிறுவனம் வருடாந்திர இலக்கை எட்ட இயலாமல் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், நிலக்கரி எடுக்கப்படும் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. நிலக்கரியின் விலையும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து உயர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்தால் பொருளாதார நெருக்கடியும் ஏற்படும். 

நிலக்கரியின் கையிருப்புகள் குறைத்துக்கொண்டு வரும் காரணத்தால், இந்தியாவின் வருங்கால மின்னுற்பத்தியும் பாதிக்கப்பட்டு மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த நிலக்கரி தட்டுப்பாடுகள் சரியாக குறைந்தது 5 முதல் 6 மாதங்கள் ஆகும் என்றும் மத்திய மின்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ள நிலையில், மின்விநியோகம் குறைந்து சீனாவின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சூழல் இந்தியாவிலும் ஏற்படலாம் எனவும் தெரியவருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India May Be Face Power Supply Issue due to Getting Down of Coal Storage and Distribution Issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->