தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி! முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.! - Seithipunal
Seithipunal


தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் முதல் முறையாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. 

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகரமான பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான தாமஸ் கோப்பை பேட்மிட்டன் போட்டி, நேற்று நடந்த அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி டென்மார்க் அணியை எதிர்கொண்டது.

இதில் இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய பேட்மிட்டன் ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்தோனீசியா ஜப்பானை எதிர்கொண்டது. இதில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இதுவரை 14 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தோனேசியா, ஜப்பானை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து இறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் அணி இந்தோனேசியாவை எதிர்கொள்ள உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India entered Thomas Cup final


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal