இந்திய குற்ற சம்பவத்தில் வெளியான பேரதிர்ச்சி அறிக்கை.!  - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குற்ற சம்பவங்களில் புள்ளி விவரப்பட்டியல் ஆனது தற்போது தேசிய குற்ற ஆவணக்காப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

2017-ம் வருடத்தில் இந்தியா முழுவதிலும் 30 லட்சத்து 62 ஆயிரத்து 579 குற்ற வழக்குகள் பதிவாகிஉள்ளதாகவும்., கடந்த 2016-ல் இந்த எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 711 ஆக இருந்ததாகவும்., கடந்த 2015-ம் வருடத்தில் 29 லட்சத்து 49 ஆயிரத்து 400 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசம்., குற்றச்சம்பவத்தில் முதல் ஆளாக உள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017- ஆம் வருடத்தில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 84 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும்., இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 10.1 விழுக்காடு அளவு குற்றச்சம்பவங்கள் ஆகும்.

இதற்கு அடுத்த இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் கடந்த 2017 ஆம் வருடத்தில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 879 வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் 9.4 விழுக்காடு அளவிலான குற்ற சம்பவங்கள் ஆகும். இதனையடுத்துள்ள இடங்களை மத்திய பிரதேசம் மூண்டவாதகவும்., கேரளா மாநிலம் நான்கவதாகவும்., டெல்லி மற்றும் பீகார் ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் உள்ளது. 

இறுதியாக தமிழகத்திற்கு குற்றச்சம்பவங்களின் அடிப்படையில் ஏழாவது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 1 லட்சத்து 78 ஆயிரத்து 836 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும்., ஒட்டுமொத்த இந்தியாவில் 5.8 விழுக்காடு அளவாகும். மேலும்., முந்தையை வருடங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்., தற்போது குறைவான குற்றங்களே பதிவாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india crime large quantity survey uttar predesh got first place


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->