பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல்!
India attacks targeting Pakistan Air Force bases
பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்திவருகிறது. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத்தளம், பஞ்சாப் சார்கோர்ட்டில் உள்ள ரபீக் விமானப்படைத்தளம், இல்லாமாபாத்தின் முடீர் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானங்களில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் போர் விமானங்கள் உள்பட எந்த சொத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். அதற்காக இந்தியா காத்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
English Summary
India attacks targeting Pakistan Air Force bases