பாகிஸ்தானின் F-16 உள்ளிட்ட 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!
IND vs PAK F16 attacked indian army
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" எனும் குறியீட்டுப் பெயரில் மே 7ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது.
இந்தியத் தாக்குதலுக்கு பதிலாக, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டையும், இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்திய எல்லையை நோக்கி தாக்குதலையும் நடத்தியுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகளை டிரோன் மூலம் தாக்கியுள்ளது. இதில், லாகூரில் அமைந்திருந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்துள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தையும், அக்னூர், கிஸ்த்வார், சம்பா போன்ற பகுதிகளையும் குறிவைத்து தாக்கி வருகிறது.
பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பிளாக் அவுட் நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் பீதி அடைந்து இருக்கின்றனர். LoC எல்லை முழுவதும் சூழ்நிலை பதற்றமாகவே காணப்படுகிறது.
பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் எல்லை நகரமான ஜெய்சால்மர் பகுதி மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதே சமயத்தில் ஜம்முவில் பாகிஸ்தானின் F-16 உள்ளிட்ட 3 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது.
English Summary
IND vs PAK F16 attacked indian army