65 வயது நபருக்கு இணையத்தில் வந்த ஆசை.! இளம்பெண்களுடன் வருடந்தோறும் உல்லாசம்.!! பணத்தை பறித்து மொட்டை அடித்த பலே கும்பல்.!!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் உள்ள குரார் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 65 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இருக்கும் கணினியின் மூலமாக இணையத்தை பார்த்து கொண்டு இருக்கும் சமயத்தில்., ஆபாச பக்கத்தின் விளம்பரம் ஒன்று இவரது கண்ணில் பட்டுள்ளது. 

அந்த விளம்பரத்தில் இருக்கும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பார்த்த இவர்., அந்த இணையத்தளத்தில் இருக்கும் பக்கத்தில் உறுப்பினராக இணையும் பட்சத்தில்., பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று வந்துள்ளது. இதனையடுத்து., இதனை கண்டு அவர் ஆசையை வளர்த்து., இணையத்தில் கேட்கப்பட்டு இருந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

இவர் அந்த இணையத்தில் இவரது விபரங்களை பதிவு செய்த சில மணித்துளிகளுக்கு உள்ளாகவே., அந்த இணையத்தில் இருக்கும் பெண் ஒருவர் அலைபேசியில் இவரை தொடர்பு கொண்டு ரூ.10 இலட்சம் செலுத்தும் பட்சத்தில்., வருடத்திற்கு 3 ஆழகிகளுடன் வருடம்தோறும் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறியுள்ளார். 

இதனை கேட்டு ஆசையை அதிகமாக வளர்த்த இவர்., பெண் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.10 இலட்சத்தையும்., மேலும் கேட்ட தொகையையும் செலுத்தியுள்ளார். அதற்கு பின்னர் பெண் வேறொரு பெண்ணின் அலைபேசி எண்ணை வழங்கவே., அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த பெண்ணும் பல ஆசைவார்த்தைகளை கூறி பணத்தை பறித்துள்ளார். 

இதற்கு பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வராததை அடுத்து., இவர் மீண்டும் தொடர்பு கொண்ட சமயத்தில் அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து தன்னிலை அறிந்த அவர்., காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai a old man money stolen by pron free website girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal