தினமும் கட்டாய பாலியல் பலாத்காரம்.. கர்ப்பமான விவரம் தெரிந்ததும் தலைமறைவான நாடகக்காதல் காமுகன்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலை சார்ந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது, 

போபால் விடிஸா பகுதியில் வசித்து வரும் எனக்கு 19 வயது ஆகிறது. நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்த நேரத்தில், என்னுடன் பணியாற்றி வந்த சைலேந்திர குஷுவாஹா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இவருடன் நான் நட்பு ரீதியில் துவக்கத்தில் பழகி வந்த நிலையில், தன்னை காதலிப்பதாக கூறினார். இவரது பேச்சுக்களில் மயங்கிய என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். 

நாங்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் வருடத்தின் போது தன்னுடன் உல்லாசமாக இருந்தார். இதன் பின்னர் தன்னை தனியாக வீடு எடுத்து தங்க வைத்தார். 

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தன்னுடன் வேண்டும் என்றமெல்லாம் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், நான் தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். இதனை அவனிடம் தெரிவித்த போது திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து, தலைமறைவாகியுள்ளான் என்று கூறியுள்ளார். 

இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள வாலிபனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Madhya predesh girl cheated drama love and sexual harassment


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->