மீண்டும் துவங்கிய இணைய, தொலைபேசி அழைப்புகள் சேவை..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் 5 ஆம் தேதியன்று இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தும் இரத்து செய்யப்பட்டது. 

இதனையடுத்து அங்கு செயல்பாட்டில் இருந்த இணையதள சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் அடுத்தடுத்து முடக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. பல தாக்குதல்களும் அவ்வப்போது நடைபெற்ற வண்ணம் இருந்தது. 

மேலும், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தின் துவக்கத்தில் பல வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. இதனைப்போன்று தீவிரவாத தாக்குதலுக்கும் அச்சுறுத்தல் இருந்ததால் இணைய சேவைகள் மற்றும் அழைப்பு தொடர்பு சேவைகள் அடுத்தடுத்து முடக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

இந்த நிலையில்., இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டு, இணையதள சேவைகள் அடிப்படை உரிமை என்று கூறி ஒரு வாரத்திற்குள் மீண்டும் வழங்க மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 

இந்த விசாரணைக்கு பின்னர் ஒரு வாரத்திற்குள் இது தொடர்பான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஜம்முவில் இருக்கும் உணவகங்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் முழு பயன்பாட்டிற்கு இணையதளங்கள் வரவில்லை. சமூக வலைதளத்தின் மீதான தடை தொடர்ந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in jammu kashmir mobile speaking network started


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->