கேரளா! இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை மையம் எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டத்திற்கு சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழா, திருச்சூர், கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு மே 16ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கையும், மணப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிவப்பு எச்சரிக்கையில் 20 சென்டிமீட்டர் மேலாக கனமழையும், ஆரஞ்சு எச்சரிக்க  6 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழையும், மஞ்சள் எச்சரிக்கை 6 முதல் 11 சென்டி மீட்டர்கள் வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகின்ற 16ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMD issue rain alerts for kerala districts


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->