இனி இட்லி, சட்னி வாங்க ஹோட்டலுக்கு போக வேண்டாம்.. இதோ வந்துவிட்டது ஏடிஎம் மெஷின்... வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் ஏடிஎம் மூலம் இட்லி, சட்னி வழங்கும் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களின் வேலை சுமையை குறைத்து நிறைய நன்மைகள் செய்து வருகின்றன.

அந்த வகையில் பெங்களூருவில் ஃப்ரஸ் ஹாட் என்ற ஹோட்டல் நிறுவனம் ஏடிஎம் மிஷின் மூலம் இட்லி சட்னி வழங்கும் மிஷினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த ஏடிஎம் மிஷினில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்து மெனுவை செலக்ட் செய்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

கட்டணத்தை செலுத்திய பிறகு நமக்குத் தேவையான உணவை உடனடியாக தயார் செய்து சுட சுட நமக்கு கொடுத்து விடும். இந்த மிஷினில் மேலும் சில வகையான இட்லிகளும் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த இட்லி ஏடிஎம் மெஷின் முழுக்க முழுக்க மனிதர்கள் யாரும் இல்லாமல் மெஷினால் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இட்லி மெஷின் 24 மணி நேரமும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இட்லி வழங்கும் மெஷின் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Idli chutney ATM machine introduce in Bangalore


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->